Author Archives: அப்துல் கையூம்

But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
– Robert Frost

காதலர் தினம்

நன்றி ” திண்ணை/ Thursday February 14, 2008 – அப்துல் கையூம் உலகெங்கும் இருக்கின்ற சின்னஞ் சிறுசுகள் அத்தனைப் பேர்களுடைய வயிற்றெரிச்சலையும் ஒட்டுமொத்தமா ஒரேநாளில் வாங்கி கொட்டிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழி. வெரி சிம்பிள். “காதலர் தினம் ஒழிக”வென்று ஒரே ஒரு கூப்பாடு போட்டால் போதுமானது. இளசுகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து நம்மை மன்சூர் அலிகான் மாதிரி வில்லனாக்கி விடுவார்கள். “ஏன் அப்பு? இந்த மாதிரி பிரச்சாரம் பண்ணுறதுக்கு எத்தனை பேரு […]

மந்திரம்

நன்றி : திண்ணை Thursday February 7, 2008 – அப்துல் கையூம் மந்திரம் என்ற தலைப்பைக் கண்டதும் நான் ஏதோ காயத்ரி மந்திரம் அல்லது நமசிவாய மந்திரத்தைப் பற்றிய வேத உபன்யாசத்தை கதாகாலட்சேபம் நிகழ்த்தப் போகிறேன் என்று திண்ணையின் ஆன்மீக வாசகர்கள் எண்ணிக் கொண்டால் கண்டிப்பாய் மிஞ்சுவது ஏமாற்றம்தான். “ஏவுகணை வேகத்தில் உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில் மந்திரம், தந்திரம், மாயாஜாலம் என்று விட்டாலாச்சார்யா பாணியில் கட்டுரை அவசியம்தானா?” என்று வாசக அன்பர்கள் வினவக்கூடும். […]

கொட்டாவி

நன்றி : திண்ணை / Friday January 25, 2008 – அப்துல் கையூம் திண்ணையில் வெளிவரும் என் கட்டுரைகளை படித்து விட்டு பெண் வாசகி ஒருவர் (என் நண்பரின் மனைவியும் கூட) தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “தும்மலை பத்தியெல்லாம் எழுதுறீங்களே? கொட்டாவியைப் பத்தி எழுதுனா என்ன?” ‘இது என்னடா இது வம்பாப்போச்சு’ என்று நினைத்துக் கொண்டேன். “மூக்கு” என்ற தலைப்பில் நான் எழுதியிருந்த நகைச்சுவைக் கட்டுரையில் தும்மலைப் பற்றி ஓரிரண்டு வரிகள் சேர்த்திருந்தது என்னவோ உண்மைதான். […]

மூக்கு

நன்றி : திண்ணை / Thursday January 10, 2008 – அப்துல் கையூம் ‘ட்ரிங்’.. ‘ட்ரிங்’.. டெலிபோன் மணி அதிர்ந்தது. ரிசீவரை காதில் வைத்தேன் “ஹலோ யார் பேசறது?” – உரக்க கத்தினேன் “நான்தான் உன் மூக்கு பேசுகிறேன்” மூக்காவது பேசுவதாவது. எனக்கு யாராவது காது குத்துகிறார்களா? நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. எனக்கு ஜலதோஷம் வந்து, நான் மூக்கால் பேசினால், என் குரல் எப்படி இருக்குமோ; அதே குரல். சந்தேகமேயில்லை என் மூக்கேதான். […]

ராக்போர்ட் சிட்டி

நன்றி : திண்ணை / Friday January 4, 2008 – அப்துல் கையூம் 1 அன்று ஆகஸ்ட் 14, 2007 ஓடிக் களைச்சுப் போயி, “புஸ்”ஸுன்னு பெருமூச்சு விட்டு, நுரை தள்ளியபடி வந்து நின்னுச்சு நான் வந்த ரயிலு. திருச்சி ஜங்ஷனுலே காலடி எடுத்து வச்சதுமே விவரிக்க முடியாத ஒரு குஷி. திருச்சின்னு சொன்னாலே எனக்கோர் ஈர்ப்பு. ஒரு பந்தபாசம். என் தாய் பிறந்த ஊர். அதனாலோ என்னவோ. வெளிநாட்டுலே திருச்சிக்காரங்களை கண்டா ஓடிப் போயி […]

ஆட்டோகிராப்

நன்றி : திண்ணை Thursday December 13, 2007 – அப்துல் கையூம் ஆட்டோகிராப் என்றதுமே சேரனின் திரைப்படம்தான் ‘சட்’டென்று நமக்கு நினைவில் வரும். வாழ்க்கையில் நாம் சந்தித்த – நமக்கு பிடித்தமான – நபர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருப்போம். அதை பாதுகாத்து வைத்திருக்கும் சுகமே அலாதியானது. புரோநோட்டு அல்லது காசோலையில் காணப்படும் கையெழுத்துகளுக்கு ஒரு விலையுண்டு. ஆனால் ஆட்டோகிராப் கையெழுத்துக்கள் விலைமதிப்பற்றது. அந்த கிறுக்கல்கள் ஆயிரமாயிரம் கதைகள் சொல்லும். கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைக்கும் […]

பஞ்ச் டயலாக்

நன்றி : திண்ணை/ Thursday December 6, 2007 அப்துல் கையூம் அன்னிக்கி நானும் என் நண்பர்களும் ஒண்ணா உக்காந்து இந்தியன் கிளப்புலே அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தோம். (நமக்கு கை வந்த கலை அது ஒண்ணுதானுங்களே?) டிங்கி ஜுரத்துலே அடிப்பட்டு சொங்கியா உக்காந்திருந்த பாபுவை போட்டு சரவணன் கலாய்ச்சிக்கிட்டு இருந்தாரு. “உடம்பை நல்லா கவனிச்சிக்குங்க. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க பாத்தீங்களா?” “அருமையான பஞ்ச் டயலாக் சார்”. வழக்கப்படி கனி ஒத்து ஊத ஆரம்பிச்சாரு. ஒரே […]

சிறுகதை எழுதப் போய் ..

Thursday November 15, 2007 – அப்துல் கையூம் நாகூர் ரூமியின் கட்டுரையை இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. “ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?” இதுதான் அந்தக் கட்டுரையின் தலைப்பு. எனக்கும் சிறுகதை எழுதவேண்டும் என்று நெடுநாளாக ஆசை. ஆனால் எப்படி தொடங்குவது?, எப்படி தொடர்வது? எப்படி முடிப்பது? ஒன்றுமே புலப்படவில்லை. ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி’ என்பார்களே அதுபோல இந்தக் கட்டுரை தற்செயலாக என் கண்ணில் பட்டது. அதிலிருந்த கருத்துக்கள் வேறு என் […]

சட்டுவம்

Thursday November 8, 2007 – அப்துல் கையூம் நான்தான் சட்டுவம் பேசுகிறேன். சட்டுவம் எப்படிப்பா பேசும்? என்றெல்லாம் குறுக்கு கேள்வி கேட்கக் கூடாது. சுட்டி டிவியிலே ஆடு, மாடு, கோழி, குதிரையெல்லாம் டயலாக் எடுத்து விடலாம். ஈசாப் நீதிக் கதையிலே முயல், நரி, தவளைகள் யாவும் பேசலாம். ஆனால் சட்டுவமாகிய நான் பேசக்கூடாதா? இது என்னப்பா அநியாயம்? நான் எங்கே பிறந்தேன்? எங்கே வளர்ந்தேன்? என்று சரியாக எனக்கு நினைவில் இல்லை. ஆனால் தற்போது நாகூர் […]

குள்ள நரி

Thursday November 1, 2007 – அப்துல் கையூம் நான் என் கூட்டத்தாருடன் காட்டில் நிம்மதியாக வசித்து வருகிறேன். என்னை ஆங்கிலத்தில் FOX என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனோ தெரியவில்லை… தமிழர்கள் மாத்திரம் என்னை தரக்குறைவாகவே மதிக்கிறார்கள். எனக்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா? குள்ளநரி… ஆமாம், குள்ளநரி… மனிதாபமானமுள்ள யாரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். “உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்று பெரியவர்கள் பாடி வைத்து விட்டுப் போன பிறகும், இவர்கள் என் […]