Category Archives: சமூகக் கட்டுரை

காதலர் தினம்

நன்றி ” திண்ணை/ Thursday February 14, 2008 – அப்துல் கையூம் உலகெங்கும் இருக்கின்ற சின்னஞ் சிறுசுகள் அத்தனைப் பேர்களுடைய வயிற்றெரிச்சலையும் ஒட்டுமொத்தமா ஒரேநாளில் வாங்கி கொட்டிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழி. வெரி சிம்பிள். “காதலர் தினம் ஒழிக”வென்று ஒரே ஒரு கூப்பாடு போட்டால் போதுமானது. இளசுகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து நம்மை மன்சூர் அலிகான் மாதிரி வில்லனாக்கி விடுவார்கள். “ஏன் அப்பு? இந்த மாதிரி பிரச்சாரம் பண்ணுறதுக்கு எத்தனை பேரு […]

மந்திரம்

நன்றி : திண்ணை Thursday February 7, 2008 – அப்துல் கையூம் மந்திரம் என்ற தலைப்பைக் கண்டதும் நான் ஏதோ காயத்ரி மந்திரம் அல்லது நமசிவாய மந்திரத்தைப் பற்றிய வேத உபன்யாசத்தை கதாகாலட்சேபம் நிகழ்த்தப் போகிறேன் என்று திண்ணையின் ஆன்மீக வாசகர்கள் எண்ணிக் கொண்டால் கண்டிப்பாய் மிஞ்சுவது ஏமாற்றம்தான். “ஏவுகணை வேகத்தில் உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில் மந்திரம், தந்திரம், மாயாஜாலம் என்று விட்டாலாச்சார்யா பாணியில் கட்டுரை அவசியம்தானா?” என்று வாசக அன்பர்கள் வினவக்கூடும். […]

மூக்கு

நன்றி : திண்ணை / Thursday January 10, 2008 – அப்துல் கையூம் ‘ட்ரிங்’.. ‘ட்ரிங்’.. டெலிபோன் மணி அதிர்ந்தது. ரிசீவரை காதில் வைத்தேன் “ஹலோ யார் பேசறது?” – உரக்க கத்தினேன் “நான்தான் உன் மூக்கு பேசுகிறேன்” மூக்காவது பேசுவதாவது. எனக்கு யாராவது காது குத்துகிறார்களா? நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. எனக்கு ஜலதோஷம் வந்து, நான் மூக்கால் பேசினால், என் குரல் எப்படி இருக்குமோ; அதே குரல். சந்தேகமேயில்லை என் மூக்கேதான். […]

ராக்போர்ட் சிட்டி

நன்றி : திண்ணை / Friday January 4, 2008 – அப்துல் கையூம் 1 அன்று ஆகஸ்ட் 14, 2007 ஓடிக் களைச்சுப் போயி, “புஸ்”ஸுன்னு பெருமூச்சு விட்டு, நுரை தள்ளியபடி வந்து நின்னுச்சு நான் வந்த ரயிலு. திருச்சி ஜங்ஷனுலே காலடி எடுத்து வச்சதுமே விவரிக்க முடியாத ஒரு குஷி. திருச்சின்னு சொன்னாலே எனக்கோர் ஈர்ப்பு. ஒரு பந்தபாசம். என் தாய் பிறந்த ஊர். அதனாலோ என்னவோ. வெளிநாட்டுலே திருச்சிக்காரங்களை கண்டா ஓடிப் போயி […]