Category Archives: நகைச்சுவைக் கட்டுரை

கொட்டாவி

நன்றி : திண்ணை / Friday January 25, 2008 – அப்துல் கையூம் திண்ணையில் வெளிவரும் என் கட்டுரைகளை படித்து விட்டு பெண் வாசகி ஒருவர் (என் நண்பரின் மனைவியும் கூட) தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “தும்மலை பத்தியெல்லாம் எழுதுறீங்களே? கொட்டாவியைப் பத்தி எழுதுனா என்ன?” ‘இது என்னடா இது வம்பாப்போச்சு’ என்று நினைத்துக் கொண்டேன். “மூக்கு” என்ற தலைப்பில் நான் எழுதியிருந்த நகைச்சுவைக் கட்டுரையில் தும்மலைப் பற்றி ஓரிரண்டு வரிகள் சேர்த்திருந்தது என்னவோ உண்மைதான். […]

பஞ்ச் டயலாக்

நன்றி : திண்ணை/ Thursday December 6, 2007 அப்துல் கையூம் அன்னிக்கி நானும் என் நண்பர்களும் ஒண்ணா உக்காந்து இந்தியன் கிளப்புலே அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தோம். (நமக்கு கை வந்த கலை அது ஒண்ணுதானுங்களே?) டிங்கி ஜுரத்துலே அடிப்பட்டு சொங்கியா உக்காந்திருந்த பாபுவை போட்டு சரவணன் கலாய்ச்சிக்கிட்டு இருந்தாரு. “உடம்பை நல்லா கவனிச்சிக்குங்க. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க பாத்தீங்களா?” “அருமையான பஞ்ச் டயலாக் சார்”. வழக்கப்படி கனி ஒத்து ஊத ஆரம்பிச்சாரு. ஒரே […]

சிறுகதை எழுதப் போய் ..

Thursday November 15, 2007 – அப்துல் கையூம் நாகூர் ரூமியின் கட்டுரையை இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. “ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?” இதுதான் அந்தக் கட்டுரையின் தலைப்பு. எனக்கும் சிறுகதை எழுதவேண்டும் என்று நெடுநாளாக ஆசை. ஆனால் எப்படி தொடங்குவது?, எப்படி தொடர்வது? எப்படி முடிப்பது? ஒன்றுமே புலப்படவில்லை. ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி’ என்பார்களே அதுபோல இந்தக் கட்டுரை தற்செயலாக என் கண்ணில் பட்டது. அதிலிருந்த கருத்துக்கள் வேறு என் […]

சட்டுவம்

Thursday November 8, 2007 – அப்துல் கையூம் நான்தான் சட்டுவம் பேசுகிறேன். சட்டுவம் எப்படிப்பா பேசும்? என்றெல்லாம் குறுக்கு கேள்வி கேட்கக் கூடாது. சுட்டி டிவியிலே ஆடு, மாடு, கோழி, குதிரையெல்லாம் டயலாக் எடுத்து விடலாம். ஈசாப் நீதிக் கதையிலே முயல், நரி, தவளைகள் யாவும் பேசலாம். ஆனால் சட்டுவமாகிய நான் பேசக்கூடாதா? இது என்னப்பா அநியாயம்? நான் எங்கே பிறந்தேன்? எங்கே வளர்ந்தேன்? என்று சரியாக எனக்கு நினைவில் இல்லை. ஆனால் தற்போது நாகூர் […]

குள்ள நரி

Thursday November 1, 2007 – அப்துல் கையூம் நான் என் கூட்டத்தாருடன் காட்டில் நிம்மதியாக வசித்து வருகிறேன். என்னை ஆங்கிலத்தில் FOX என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனோ தெரியவில்லை… தமிழர்கள் மாத்திரம் என்னை தரக்குறைவாகவே மதிக்கிறார்கள். எனக்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா? குள்ளநரி… ஆமாம், குள்ளநரி… மனிதாபமானமுள்ள யாரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். “உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்று பெரியவர்கள் பாடி வைத்து விட்டுப் போன பிறகும், இவர்கள் என் […]

சும்மா

நன்றி : திண்ணை/ Friday October 19, 2007 – அப்துல் கையூம் சும்மா இருந்த நேரத்துலே, சும்மா இருக்கிறதை விட்டுட்டு, சும்மா எதையாவது எழுதலாமேன்னு நெனச்சேன். எதப்பத்தி எழுதறதுன்னு மூளையை பிசைஞ்சிக்கிட்டு இருந்தப்போ, “சும்மா”வைப் பத்தியே எழுதுனா என்னான்னு மனசுலே தோணிச்சு. அதப்பத்தியே சும்மா எழுத ஆரம்பிச்சுட்டேன். சும்மா சொல்லக் கூடாது. இந்த உலகத்துலே எல்லாமே “சும்மா”வை சுத்திதான் இயங்கிக்கிட்டு இருக்கு. அத நாம மொதல்லே புரிஞ்சுக்கணும். அம்மாவுக்கு அடுத்தபடியா எல்லாரும் அதிகமா உபயோகப் படுத்தற […]

பங்க்ச்சுவாலிட்டி

– அப்துல் கையூம் உலகத்திலேயே எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை ஆங்கில அகராதியில் உண்டென்றால் அது PUNCTUALITY என்பதுதான். “எப்பவுமே இவன் குண்டக்கா மண்டக்கான்னு பேசுறானே“ என்று என் நண்பர்களே எனக்கு பின்னால் பேசுவதுண்டு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்ற கலையில் இன்னும் சரியாக தேர்ச்சி பெறாததே இதற்கு காரணம். சரியென்று மனதில் பட்டதை உளறிக் கொட்டி நண்பர்களிடத்தில் கெட்டப் பெயர் வாங்கிக் கொண்ட அனுபவம் நிறையவே உண்டு, பள்ளிப் பருவத்தில் காலந்தவறாமையின் அவசியத்தை எனக்கு எடுத்துரைக்காத […]

என் இசைப் பயணம்

Thursday October 11, 2007 – அப்துல் கையூம் அப்ப நான் திருச்சி ஜமால் முகம்மது காலேஜ்லே பர்ஸ்ட் இயர் படிச்சுக்கிட்டு இருந்த நேரம். தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு பேரு Birds Lodge. மன்னார்புரத்துலே இருந்துச்சு. கலாட்டா, அலம்பல், நையாண்டி, கேலி, குசும்பு எதுக்குமே குறைச்சலில்லே. “பசுமை நிறைந்த நினைவுகளே.. பாடித்திரிந்த பறவைகளே”ன்னு செட்டிநாட்டுக்காரரு பொருத்தமாத்தான் பாடி வச்சிட்டு போயிருக்காரு. ஒருநாள் ஹாஸ்டலுக்கு கீழே இருந்த ஆஞ்சநேயா ஹோட்டல்லே காப்பி குடிச்சிக்கிட்டு இருந்தேனா, அப்ப “மாஞ்சோலை கிளிதானோ? மான்தானோ? […]

தைலம்

Thursday October 4, 2007 – அப்துல் கையூம்   டெரிக் ஓ பிரெயின் குழந்தைகளுக்கு பொது அறிவுப் போட்டி நடத்த பஹ்ரைன் வந்தபோது, ஒரு துண்டுச்சீட்டில் “தைலத்தை கண்டுபிடித்தது யார்?” என்ற கேள்வியை எழுதி நான் தயாராக வைத்திருந்தேன். ஒருக்கால் அவருக்கு தெரியாமல் போனாலும் கூட யாரிடத்திலிருந்தாவது சரியான விடை உதித்து வந்து, நம்முடைய சந்தேகம் தீராதா என்ற நப்பாசை மிகுந்திருந்தது. வேறென்ன? யார் கண்டு பிடித்தார்கள் என்ற உண்மை தெரிந்தால் அவர்களை மனதார திட்டித் தீர்க்கலாமே […]

மீசை

 Thursday September 20, 2007  அப்துல் கையூம் (மீசை வைத்தவர்கள் அதிலும் குறிப்பாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுபவர்கள் தயவுசெய்து இக்கட்டுரையை படிக்க வேண்டாம்)  சிலருக்கு அண்டை வீட்டுக்காரர்களiனால் பிரச்சினை வரும். சிலருக்கு சொந்த பந்தங்களால் பிரச்சினை எழும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு பிரச்சினையே என் மீசைதான்.  மீசை வைப்பதா? வேண்டாமா? என்று குழம்பியே நடுத்தர வயதை எட்டியாகிவிட்டது. எத்தனையோ முறை வளர்த்தாகி விட்டது. வளர்த்த வேகத்தில் மழித்தும் பார்த்தாகி விட்டது. வேறென்ன? கம்பளிப்பூச்சியை மோவாயில் சுமந்துக் […]